அரச விசாரணை ஆணையம் தியோவின் சகோதரியையும் வழக்குரைஞர்களையும் சந்தித்தது

Posted: February 14, 2011 in News
Tags:

source : Malaysiakini

9 Feb | செய்தி.

அரச விசாரணை ஆணையம்,  வரும் திங்கட்கிழமை விசாரணை தொடங்குவதற்கு முன்னதாக இன்று நடத்திய இறுதிக் கூட்டத்தில் தியோ பெங் ஹாக்கின் சகோதரி லீ லானும் கோபிந்த் சிங் டியோ, மாலிக் இம்தியாஸ் சர்வார், கர்பால் சிங் ஆகிய வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.

 

கோபிந்த்துடன் லீ லான் பிற்பகல் மணி 3க்கு ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தை சென்றடைந்தார். பின்னர் 3.15 வாக்கில் ஆணைய உறுப்பினர்கள் வந்தனர். விசாரணை ஆணைய உறுப்பினர்களுடன் 15 நிமிடங்களுக்கு கலந்துரையாடிய பின்னர் லீ லானும் வழக்குரைகளும் மாலை மணி 4.40 வாக்கில் வெளியில் வந்தனர்.

ஷா அலாமில் நடைபெற்ற தியோ மரண விசாரணையில் தவறாமல் கலந்து கொண்ட லீ லான் களைப்படைந்தவரைப் போல் காணப்பட்டார். அவர் இன்று பின்னேரம் அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி அந்த அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அது தனது விசாரணைகளை நியாயமாகவும் நிபுணத்துவ ரீதியிலும் வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என அவர் ஏற்கனவே கேட்டுக் கொண்டுள்ளார்.

எழுவர் கொண்ட நடப்பு ஆணையக் குழுவில் சிவில் சமூக அமைப்பு ஒன்று கேட்டுக் கொண்டதைப் போல மேலும் நான்கு தனி நபர்களை நியமிக்குமாறு தியோ குடும்பம் விடுத்த வேண்டுகோள் மீது அரசாங்கம் மௌனமாக இருப்பது குறித்து லீ லான் ஏமாற்றம் தெரிவித்தார்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s